/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சமூக நீதியை கொண்டுவந்து தி.மு.க., ஆட்சியில் சாதனை: பொன்முடி பேச்சு
/
சமூக நீதியை கொண்டுவந்து தி.மு.க., ஆட்சியில் சாதனை: பொன்முடி பேச்சு
சமூக நீதியை கொண்டுவந்து தி.மு.க., ஆட்சியில் சாதனை: பொன்முடி பேச்சு
சமூக நீதியை கொண்டுவந்து தி.மு.க., ஆட்சியில் சாதனை: பொன்முடி பேச்சு
ADDED : அக் 01, 2024 06:57 AM

சிதம்பரம்: ஆணும் பெண்ணும் சமம் என்ற சமூக நீதியை கொண்டு வந்ததுதான் தி.மு.க., ஆட்சியின் சாதனை என, அமைச்சர் பொன்முடி பேசினார்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா நேற்று நடந்தது. சாஸ்திரி அரங்கில் நடந்த விழாவில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். துணைவேந்தர் கதிரேசன் வரவேற்றார். சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ., ரவிக்குமார் எம்.பி., முன்னிலை வகித்தனர். வனத்துறை அமைச்சர் பொன்முடி, வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம், திருமாவளவன் எம்.பி., ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினர்.
அமைச்சர் பொன்முடி பேசுகையில், நுாற்றாண்டுகளை நோக்கி செல்லும், இப்பல்கலைக்கழகத்தில் நான் முன்னாள் மாணவன். பலரை பட்டதாரியாக்கியது இப்பல்கலைகழகம். இங்கு, மொழிப்போர் தியாகி ராஜேந்திரன் சிலையை கருணாநிதி திறந்து வைத்தார். நானும் உடன் இருந்தேன். இங்கு படித்து, தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்கள் ஏராளம். மக்கள் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இங்கு கருணாநிதி நுாற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது.
ஆணும் பெண்ணும் சமம், அனைத்து ஜாதியினரும் சமம் என்ற சமூக நீதியை கொண்டு வந்ததுதான், திராவிட மாடல் ஆட்சியின் சாதனை. பெண்கள் படிக்க வேண்டும் என்பதற்காக, 8ம் வகுப்புக்கு மேல் படித்தவர்களுக்கு திருமண உதவி திட்டத்தை கருணாநிதி கொண்டுவந்தார். அவர் வழியில் முதல்வர் ஸ்டாலின், புதுமைப்பெண் திட்டம் மற்றும் நான் முதலவன் திட்டத்தை செயல்படுத்தி, உயர் கல்வி படிக்க ஆயிரம் ரூபாய் வழங்குகிறார் என்றார்.
விழாவில் அண்ணாமலை நகர் பேரூராட்சி சேர்மன் பழனி, முன்னாள் எம்.எல்.ஏ., சரவணன், சிதம்பரம் சப் கலெக்டர் ராஷ்மிராணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பல்கலைகழக பதிவாளர் சிங்காரவேலு நன்றி கூறினார்.