/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உடைந்த மலட்டாறு பாலம்; நெடுஞ்சாலை அதிகாரிகள் ஆய்வு
/
உடைந்த மலட்டாறு பாலம்; நெடுஞ்சாலை அதிகாரிகள் ஆய்வு
உடைந்த மலட்டாறு பாலம்; நெடுஞ்சாலை அதிகாரிகள் ஆய்வு
உடைந்த மலட்டாறு பாலம்; நெடுஞ்சாலை அதிகாரிகள் ஆய்வு
ADDED : டிச 05, 2024 05:44 AM

பண்ருட்டி; மலட்டாறு பாலம் உடைந்த பகுதியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பண்ருட்டி அடுத்த சின்னபேட்டை ஊராட்சி பகுதியில் உள்ள மலட்டாற்றில் நேற்று முன்தினம் அதிகளவில் மழைநீர் சென்றதால் சிறுபாலம் அடித்து செல்லப்பட்டது.
இந்நிலையில் உடைந்த பாலம் பகுதியை விருத்தாசலம் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அய்யாதுரை, உதவி கோட்ட பொறியாளர் சுப்ரமணியன், உதவி பொறியாளர் லோகநாதன் அண்ணாகிராமம் ஒன்றிய தி.மு.க., செயலாளர் வெங்கட்ராமன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது கோட்ட பொறியாளர் அய்யாதுரை கூறுகையில். விரைவில் புதிய உயர்மட்ட பாலம் கட்டுவதற்காக திட்ட மதிப்பீடு தயார் செய்யப்படும்.
தற்காலிகமாக ஓரிரு நாட்களில் 1 மீட்டர் அகலமுள்ள குழாய் பாலம் அமைத்து போக்குவரத்து சரிசெய்து தரப்படும் என்றார்.