/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு: தண்ணீர் வெளியேறி வீணானது
/
கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு: தண்ணீர் வெளியேறி வீணானது
கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு: தண்ணீர் வெளியேறி வீணானது
கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு: தண்ணீர் வெளியேறி வீணானது
ADDED : செப் 01, 2025 12:58 AM

திட்டக்குடி : திட்டக்குடியில் கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் சாலையில் ஓடியது.
நெய்வேலி இரண்டாம் சுரங்கத்திலிருந்து, கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு வரும் 20 ஆண்டுகளுக்கு, என்.எல்.சி., நிறுவனம், தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்திற்கு தண்ணீர் வழங்குகிறது.
இத்திட்டத்திற்காக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 479 கோடி ரூபாய் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், நீர் உந்து நிலையங்கள் மற்றும் விநியோக வசதிகள் போன்றவற்றை அமைக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம், கங்கைகொண்டான், குறிஞ்சிப்பாடி, பெண்ணாடம், மங்கலம்பேட்டை 4 பேரூராட்சிகள், வடலுார், திட்டக்குடி 2 நகராட்சிகள் மற்றும் விருத்தாசலம், நல்லுார், மங்களூர் 3 ஒன்றியங்களில் உள்ள 625 கிராமங்களில் வசிப்போர் பயன்பெறும் வகையில், குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் இதர பணிகள் முழு வேகத்தில் நடக்கும் நிலையில், 90 சதவீத பணிகள் முடிந்துள்ளது.
குழாய்கள் மூலம் சோதனை அடிப்படையில் தண்ணீர் இயக்கப்படுகிறது.
அவ்வாறு இயக்கப்படுவதால் பல இடங்களில் குழாய் உடைந்து தண்ணீர் சாலை, தெருக்களில் வெளியேறுகிறது. இதனை கூட்டுக்குடிநீர் திட்ட ஊழியர்கள் சீரமைத்து வருகின்றனர்.
திட்டக்குடி மேற்கு மெயின்ரோடு பகுதி வளைவில் நேற்று காலை 10:30 மணியளவில் கூட்டுக்குடிநீர் குழாயில் லாரி மோதியதால் உடைப்பு ஏற்பட்டு, அதிகளவில் தண்ணீர் சாலையில் ஓடியது. இதனால் பொது மக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
பின்னர் தண்ணீர் நிறுத்தப்பட்டு, சேதமடைந்த கூட்டுக்குடிநீர் குழாயை பகல் 11:30 மணியளவில் ஊழியர்கள் சரி செய்தனர்.