/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சூளை குட்டை நீரில் மூழ்கி அண்ணன், தங்கை பலி; பண்ருட்டி அருகே பரிதாபம்

ADDED : அக் 08, 2024 06:10 AM

பண்ருட்டி: பண்ருட்டி அருகே செங்கல் சூளை குட்டை நீரில் மூழ்கி அண்ணன், தங்கை இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை, மதனப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாதன்- ஜானகி தம்பதியின் பிள்ளைகள் தஷ்வந்த், 12; பிரதிக் ஷாஸ்ரீ,7; இருவருக்கும், பள்ளி விடுமுறை என்பதால் பண்ருட்டி அடுத்த நத்தம் கிராமத்தில் உள்ள தங்கள் தாய் ஜானகியின் அக்கா மகாலட்சுமி வீட்டிற்கு வந்திருந்தனர்.
நேற்று பண்ருட்டி அடுத்த கணிசப்பாக்கம் கிராமத்தில் மகாலட்சுமியின் கணவர் தனபதிக்கு சொந்தமான செங்கல் சூளைக்குச் சென்று, விளையாடிக் கொண்டிருந்தனர். மதியம் 1:30 மணியளவில் இருவரும் அங்குள்ள குட்டையில் விழுந்து மூழ்கினர்.
உடன், அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருவரையும் பரிசோதித்த டாக்டர், தஷ்வந்த், பிரதிக் ஷாஸ்ரீ ஆகிய இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தார்.பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.