/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பைக்கில் இருந்து விழுந்த அண்ணன் பலி; தம்பி படுகாயம்
/
பைக்கில் இருந்து விழுந்த அண்ணன் பலி; தம்பி படுகாயம்
பைக்கில் இருந்து விழுந்த அண்ணன் பலி; தம்பி படுகாயம்
பைக்கில் இருந்து விழுந்த அண்ணன் பலி; தம்பி படுகாயம்
ADDED : மார் 19, 2025 04:20 AM
விருத்தாசலம், : விருத்தாசலம் அருகே பைக்கில் சென்ற சகோதரர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அண்ணன் இறந்தார். தம்பி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
விருத்தாசலம் அடுத்த மணக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன் மகன்கள் வெங்கடேஸ்வரன், 20; விக்னேஷ்வரன், 16; இருவரும் நேற்று முன்தினம் இரவு பைக்கில், பூவனுார் - மாத்துார் சாலையில் சென்றபோது நிலைதடுமாறி விழுந்தனர்.
அதில் படுகாயமடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு விருத்தா சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வெங்கடேஸ்வரன் இறந்தார்.
படுகாயமடைந்த விக்னேஷ்வரன், மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
விபத்து குறித்து மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.