/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஒரு ரூபாயில் இலவச நன்மை பி.எஸ்.என்.எல்., அதிரடி
/
ஒரு ரூபாயில் இலவச நன்மை பி.எஸ்.என்.எல்., அதிரடி
ADDED : ஆக 05, 2025 02:02 AM
கடலுார்: பி.எஸ்.என்.எல்., நிறுவனம் வாடிக்கையாளர்களுக்காக பிரத்யேகமாக வெறும் ஒரு ரூபாயில் இலவச நன்மைகள் வழங்குகிறது.
இகுறித்து பி.எஸ்.என்.எல்., கடலுார் மாவட்ட பொது மேலாளர் பாலச்சந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
பி.எஸ்.என்.எல்., நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக பிரத்யேகமாக புதிய ஃபிரிடம் பிளான் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்த திட்டத்தின் வாயிலாக புதிய மொபைல் இணைப்பு பெறுபவர்களுக்கு அல்லது மற்ற நெட்வொர்க்கில் இருந்து பி.எஸ்.என்.எல்.,க்கு எம்.என்.பி., மூலம் மாற்றம் பெறுபவர்களுக்கு வெறும் ஒரு ரூபாயில் இலவச நன்மைகள் வழங்கப்படுகின்றன.
எல்லையற்ற அழைப்புகள், தினமும் 2-ஜிபி டேட்டா, 100 குறுஞ்செய்திகள் இலவசம். செல்லுபடியாகும் காலம் 30 நாட்கள். சிம் கார்டு இலவசம். இத்திட்டம் கடந்த 1ம் தேதி வரும் 31ம் தேதி வரை மட்டுமே பொது மக்களுக்காக நடைமுறையில் இருக்கும். இத்திட்டத்தின் கீழ் பயன் பெற அருகில் உள்ள பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர் சேவை மையத்தில் அணுகலாம்.