/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி சிறப்பு சலுகை பி.எஸ்.என்.எல்., அதிகாரி தகவல்
/
வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி சிறப்பு சலுகை பி.எஸ்.என்.எல்., அதிகாரி தகவல்
வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி சிறப்பு சலுகை பி.எஸ்.என்.எல்., அதிகாரி தகவல்
வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி சிறப்பு சலுகை பி.எஸ்.என்.எல்., அதிகாரி தகவல்
ADDED : அக் 24, 2025 03:11 AM
கடலுார்: பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி போனஸ் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கடலுார் பொதுமேலாளர் பாலச்சந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு.
பி.எஸ்.என்.எல்., தீபாவளி பொனான்சா சலுகை யில், புதிய வாடிக்கையாளர் கள், பழைய சந்தாதாரர்கள், தனி நுகர்வோர், தொழில்துறை, மூத்த குடிமக்கள் என அனைத்து வாடிக்கையார்களும் தனித்துவமான பலன் கிடைக்கும் வகையில் சலுகைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
புதிய வாடிக்கையாளர் களுக்கு தீபாவளி பொனான் சா 4ஜி திட்டத்தின் கீழ் ஒரு ரூபாய் செலுத்தி 30நாட்களுக்கான பிளானுடன், தினமும் 2 ஜி.பி.டேட்டா, நுாறு எஸ்.எம்.எஸ்., இலவச சிப் பெறலாம்.
கார்ப்பரேட் காம்போ சலுகைகளில், குறைந்தபட்சம் 10 புதிய போஸ்ட் பெய்டு இணைப்பு மற்றும் ஒரு எப்.டி.டி.எச்.இணைப்பையும் எடுத்தால் முதல் மாதத்தில் எப்.எம்.சி.,ல் 10சதவீத தள்ளுபடி வழங்கப்படும்.
கிப்ட் ரீசார்ஜ் சலுகையில், செல்ப் கேர் ஆப் மூலமாக பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் செய்தால் 2.5 சதவீதம் கூடுதல் மதிப்பு டிஸ்கவுண்ட் கிடைக்கும்.
மூத்த குடிமக்களுக்கான சிறப்பு திட்டத்தில் 60வயதிற்கும் மேற்பட்ட புதிய வாடிக்கையாளர்களுக்கு புதிய இணைப்பு பிளான்-1812ன் கீழ் 365 நாட்களுக்கு அன்லிமிடெட் கால்ஸ், தினமும் 2ஜி.பி., டேட்டா, இலவச சிப் வழங்கப்படுகிறது.
பை டி.வி. பிரிமியம் 6 மாதங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. அக்.18 முதல் நவ.18 வரை இந்த சலுகைகள் வழங்கப்படுகிறது. மேலும் 485, 199 9 ரூ பாய் திட்டங்களில் பி.எஸ்.என்.எல்., இணைய தளம், செல்ப் கேர் ஆப்பில் வாங்கினால் 5 சதவீத ம் நன்மை வழங்கப்படலாம்.
அதில் 2.5 சதவீதம் உடனடி வாடிக்கையாளர் தள்ளுபடி, மீதமுள்ள 2.5% BSNL சமூக சேவைக்கான நன்கொடையாக வழங்கப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

