ADDED : பிப் 09, 2025 06:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் மஞ்சக்குப்பத்தில், மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து, இந்திய கம்யூ., சார்பில் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடந்தது.
மாவட்ட துணை செயலாளர் குளோப் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் நாகராஜ், பண்ருட்டி ஒன்றிய செயலாளர் ஞானசேகர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் பாஸ்கர், மாவட்ட நிர்வாகக்குழு சக்திவேல், மாநகர துணை செயலாளர் முருகன், நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, அரிகிருஷ்ணன், வடிவேல், பாலு, செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.
முன்னதாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டதை கண்டித்தும், வளர்ச்சி திட்டப் பணிகளில் தமிழ்நாடு, கேரளம் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.