/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கோவில் குருக்களுக்கு புத்தொளி பயிற்சி
/
கோவில் குருக்களுக்கு புத்தொளி பயிற்சி
ADDED : பிப் 26, 2024 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் புத்தொளி பயிற்சி துவங்கியது.
கோவில் செயல் அலுவலர் சிவக்குமார் தலைமை தாங்கினார். குருக்கள் நாகராஜ், மோகன சுந்தரம் ஆகியோர் பயிற்சி அளித்தனர். பயிற்சியில் கடலுாரில் இருந்து பல்வேறு கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், ஓதுவார்கள், பூசாரிகள் 30 பேர் பங்கேற்றனர். வேத ஆகமம், சாஸ்திரம், தேவார திருமுறை, புராணம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

