/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கட்டட தொழிலாளர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்
/
கட்டட தொழிலாளர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்
ADDED : பிப் 19, 2024 05:42 AM

கடலுார்: தமிழக கட்டட தொழிலாளர்கள் பொது நல மத்திய முன்னேற்ற சங்க மாநில பொதுக்குழுக் கூட்டம் கடலுார், கே.என்.பேட்டையில் நடந்தது.
மாநிலத் தலைவர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் மும்மூர்த்தி, செயலாளர் பழனிவேல், துணை செயலாளர் ஞானமணி முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் பரமசிவம் வரவேற்றார். சட்ட ஆலோசகர் சக்திவேல் தீர்மானங்கள் வாசித்தார்.
கூட்டத்தில், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சதீஷ்குமார், ராமு, சரவணன், மகளிரணி காமாட்சி உட்பட பலர் பங்கேற்றனர். குடும்ப ஓய்வூதியம் 500 ரூபாயில் இருந்து 1,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.
மணல், சிமென்ட், கம்பி ஆகியவற்றின் விலை உயர்வை கட்டுப்படுத்தி தட்டுபாடின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
தனுசு நன்றி கூறினார்.

