/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பு.முட்லுார் நான்கு வழிச்சாலையில் மீண்டும் போக்குவரத்து துவக்கம்
/
பு.முட்லுார் நான்கு வழிச்சாலையில் மீண்டும் போக்குவரத்து துவக்கம்
பு.முட்லுார் நான்கு வழிச்சாலையில் மீண்டும் போக்குவரத்து துவக்கம்
பு.முட்லுார் நான்கு வழிச்சாலையில் மீண்டும் போக்குவரத்து துவக்கம்
ADDED : நவ 11, 2024 05:19 AM

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே கோர விபத்து காரணமாக பு.முட்லுார் நான்கு வழிச்சாலையில் மூடப்பட்ட ஒரு பக்க சாலையிலும் நேற்று முதல் போக்குவரத்து துவங்கியது.
விழுப்புரம் - நாகப்பட்டிணம் நான்கு வழிச்சாலையில், பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் மேம்பாலத்தையொட்டி, சர்வீஸ் சாலையின் இரு பக்கமும் போடப்படாமல் கடந்த ஆகஸ்ட் மாதம் போக்குவரத்து துவங்கியது.
பு.முட்லுார் மேம்பாலம் அருகே சாலையை குறுக்கிடும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் நடந்து வந்தது. விபத்துகள் நடப்பது குறித்து, தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
ஆனால், தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் கண்டுக்கொள்ளாததால், கடந்த செப்டம்பர் மாதம் 12ம் தேதி பு.முட்லுார் மேம்பாலத்தில் கார் மீது லாரி மோதிய கோர விபத்தில், ஒரு குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
இதையடுத்து, பு.முட்லுார் நான்கு வழிச்சாலையில் ஒரு பக்க சாலை தடுப்பு கட்டைகள் வைத்து மூடப்பட்டது. இதனால், சிதம்பரத்தில் இருந்து கடலுார் நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் பு.முட்லுார் வெள்ளாற்று பாலம் அருகே சர்வீஸ் சாலை வழியாக சென்று, பழைய எம்.ஜி.ஆர்., சாலை வழியாக கடலுார் சென்றன.
இந்நிலையில், பு.முட்லுார் எம்.ஜி.ஆர்., சிலை அருகே மேம்பாலத்தையொட்டி இரு பக்கமும் சர்வீஸ் சாலை போடப்பட்டது.
சர்வீஸ் சாலைக்கு இடையூராக இருந்த உயர் மின் கோபுரமும் மாற்றி அமைக்கப்பட்டதால் நேற்று முதல் பு.முட்லுார் நான்கு வழிச்சாலை மேம்பாலம் வழியாக இரு பக்கமும் போக்குவரத்து துவங்கியது.