ADDED : டிச 15, 2024 07:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் ரஹ்மான் நகரை சேர்ந்தவர் சரத்பாபு, ரேஷன்கடை பணியாளர்.
இவர், கடந்த 3 மாதம் முன்பு குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்றிருந்தபோது, அவரது வீட்டின் கதவை உடைத்து 3 சவரன் நகைகளை திருடி சென்றனர்.புகாரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து மறுநாளே 2 பேரை கைது செய்து திருட்டு போன நகைகளை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் மற்றொரு குற்றவாளியான நெல்லிக்குப்பம் திடீர்குப்பத்தை சேர்ந்த ஜெய்கணேஷை,19; என்பவரை நேற்று கைது செய்தனர்.