/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மின்கம்பத்தில் பஸ் மோதல் நெல்லிக்குப்பத்தில் பரபரப்பு
/
மின்கம்பத்தில் பஸ் மோதல் நெல்லிக்குப்பத்தில் பரபரப்பு
மின்கம்பத்தில் பஸ் மோதல் நெல்லிக்குப்பத்தில் பரபரப்பு
மின்கம்பத்தில் பஸ் மோதல் நெல்லிக்குப்பத்தில் பரபரப்பு
ADDED : அக் 13, 2024 07:27 AM

நெல்லிக்குப்பம் : ஓவர்டேக் செய்ய முயன்ற அரசு விரைவு பஸ் மின் கம்பத்தில் மோதி விபத்திற்குள்ளானது.
பெங்களுரூவில் இருந்து தமிழக அரசு விரைவு பஸ் நேற்று அதிகாலை புதுச்சேரி நோக்கி சென்றது. நெல்லிக்குப்பம் கீழ்பட்டாம்பாக்கம் அருகே சென்றபோது முன்னாள் சென்ற வாகனத்தை முந்தி செல்ல அரசு விரைவு பஸ் டிரைவர் முயன்றார். அதில், பஸ் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதி பக்கத்தில் இருந்த ஓட்டு வீட்டின் மீது மோதி நின்றது. இதில் மின்கம்பமும்,வீடும் சேதமானது.
இந்த விபத்தில் பஸ் டிரைவரான, முத்தாண்டிக்குப்பத்தை சேர்ந்த ரகுந்தன்,50; காயமடைந்தார். பயணிகள் காயமின்றி தப்பினர்.
விபத்து குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.