தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பஸ் கண்டக்டர் விரல் துண்டிப்பு

 பஸ் கண்டக்டர் விரல் துண்டிப்பு

 பஸ் கண்டக்டர் விரல் துண்டிப்பு


ADDED : பிப் 02, 2026 03:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 02, 2026 03:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: குறிஞ்சிப்பாடி அடுத்த தையல்குணாம்பட்டினம் சிங்காரம் மகன் சம்பந்தம், 45; தனியார் பஸ் நடத்துனர். கடந்த 9ம் தேதி, விருத்தாசலத்தில் இருந்து கடலுார் சென்ற பஸ்சில் நடத்துனராக பணியில் இருந்தார். டி.வி.புத்துார் கண்ணன் மகன் வெங்கடேசன், 48; ஓட்டி சென்றார்.

விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை சென்ற போது, பஸ்சில் இருந்து திடீரென சப்தம் கேட்டது. இதனால் பஸ்சை நிறுத்திவிட்டு, இன்ஜினில் வழிந்த ஆயிலை துடைத்தபோது, சம்பந்தம் விரல்கள் இன்ஜின் பெல்டில் சிக்கியது. இதில், அவரது வலது கை மோதிர விரல் துண்டான நிலையில், மேலும் இரு விரல்கள் காயமடைந்தன. விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சம்பந்தம் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்றார். அவரது மனைவி ராஜேஸ்வரி புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us