/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பஸ் டிரைவர் மாரடைப்பால் பலி மாணவர்கள் மீட்பு
/
பஸ் டிரைவர் மாரடைப்பால் பலி மாணவர்கள் மீட்பு
ADDED : நவ 09, 2025 03:12 AM

சிதம்பரம்: ஓடும் பஸ்சில் மாரடைப்பு ஏற்பட்டு டிரைவர் உயிரிழந்த நிலையில், மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் இருந்து நேற்று சிதம்பரத்திற்கு, 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி சுற்றுலா வந்தனர். தனியார் பஸ்சில் வந்த மாணவர்கள், சிதம்பரம் நடராஜர் கோவிலை சுற்றி பார்த்துவிட்டு மாலை புறப்பட்டனர்.
வடலுார் அடுத்துள்ள சேப்ளாநத்தத்தை சேர்ந்த தினகரன், 31, என்பவர் பஸ்சை ஓட்டி சென்றார். சிதம்பரத்தில் இருந்து விருத்தாசலம் புறப்பட்ட பஸ், வயலுார் அருகே சென்றபோது, திடீரென தினகரனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
அந்த சமயத்தில், பஸ்சின் வேகத்தை குறைத்த தினகரன், சாலையோரம் இருந்த, வீட்டின் சுற்று சுவரில் மோதி பஸ்சை நிறுத்தினார்.
பஸ் ஸ்டியரங்கில் சாய்ந்தபடி தினகரன் உயிரிழந்தார். அருகில் இருந்தவர்கள் பஸ்சிற்குள் ஏறி, மாணவர்களை பத்திரமாக மீட்டனர்.

