ADDED : நவ 12, 2024 06:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி: அரசு பஸ்சில் ரகளை செய்து, டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
குள்ளஞ்சாவடியில் இருந்து பண்ருட்டி செல்லும் தடம் எண்-18 அரசு பஸ், நேற்று முன்தினம் சமட்டிக்குப்பம் பகுதியில் சென்றது. அங்கு, பஸ்சில் ஏறிய கிருஷ்ணன்பாளையத்தை சேர்ந்த செல்வகணபதி, டிரைவரை திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து டிரைவர் ஜெயராமன் கொடுத்த புகாரில், குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து, செல்வகணபதியை கைது செய்தனர்.