/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பஸ் நிலைய வணிக வளாகம் ஏலம் ஒத்திவைப்பு
/
பஸ் நிலைய வணிக வளாகம் ஏலம் ஒத்திவைப்பு
ADDED : மார் 29, 2025 04:18 AM
ராமநத்தம்: ராமநத்தம் பஸ் நிலையத்தில் வணிக வளாகங்கள் நடத்துவதற்கான ஏலம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
சென்னை - திருச்சி, கடலுார் - திருச்சி, ராமநத்தம் - ஆத்துார் சாலைகள் இணையும் இடத்தில் ராமநத்தம் உள்ளது.
இங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு எளிதில் செல்ல முடிவதால் ஆயிரக்கணக்கான பயணிகள் தினசரி வந்து செல்கின்றனர்.
திருச்சி மார்க்க சர்வீஸ் சாலையையொட்டி, உள்ள ராமநத்தம் பஸ் நிலையத்தில் வணிக வளாகங்கள், கழிவறைகள், இரு சக்கர வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இதனை ஏற்று நடத்துவதற்கு ஆண்டுதோறும் மார்ச் மாதம் ஏலம் விடப்படும்.
நடப்பாண்டிற்கான ஏலம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. மங்களூர் பி.டி.ஓ., முருகன் தலைமை தாங்கினார். அப்போது, பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
கழிவறைகளை சீரமைக்க வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குத்தகைதாரர்கள் யாரும் ஏலம் கோரவில்லை. இதனால், தேதி குறிப்பிடாமல் ஏலம் ஒத்தி வைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

