/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாளிகைமேட்டில் பஸ் கண்ணாடி உடைப்பு
/
மாளிகைமேட்டில் பஸ் கண்ணாடி உடைப்பு
ADDED : டிச 16, 2025 05:23 AM

பண்ருட்டி: பண்ருட்டி அருகே பஸ் நிறுத்தத்தில் நிற்காகமல் தள்ளி நின்ற அரசு பஸ்சின் பின்பக்க கண்ணாடியை மர்ம நபர் கல்வீசி உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பண்ருட்டி அடுத்த மாளிகைமேடு பஸ் நிறுத்த்தில் நேற்று காலை 9:00 மணிக்கு பள்ளி, கல்லுாரி மாணவ,மாணவிகள் பஸ்சுக்காக காத்திருந்தனர்.
அவ்வழியே தடம் எண். 155, டி.என்.32. என்.4060 பதிவு எண் கொண்ட பஸ் வந்தது. பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தால், பஸ் டிரைவர் பஸ்சை பஸ் நிறுத்தத்தில் இருந்து சற்று துாரம் சென்று நிறுத்தி பயணிகளை இறக்கினார்.
பஸ் நிறுத்தம் அருகே காத்திருந்த மர்ம நபர், பஸ்சின் பின்ன பக்க கண்ணாடி மீது கல் வீசினார். இதில் கண்ணாடி முழுவது உடைந்து சேதமானது. இது குறித்து பண்ருட்டி போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

