/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பஸ் கண்ணாடி உடைப்பு: போதை ஆசாமி கைது
/
பஸ் கண்ணாடி உடைப்பு: போதை ஆசாமி கைது
ADDED : ஜன 06, 2025 10:37 PM
காட்டுமன்னார்கோவில்; வில்வகுளத்தில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்த போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
கும்பகோணம் கோட்ட அரசு பஸ் நேற்று முன்தினம் இரவு ஜெயங்கொண்டத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு காட்டுமன்னார்கோவில் வந்தது. வில்வக்குளம் பஸ் நிறுத்தத்தில் நின்று பயணிகளை இறக்கிவிட்டு புறப்பட்டது. அப்போது திடீரென மது போதையில் இருந்த வில்வக்குளத்தைச் சேர்ந்த தியாகராஜன் மகன் வீரகண்ணன், 25; கல்லால் அரசு பஸ் பின்பக்க கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பினர். பஸ் பயணிகளுக்கு பாதிப்பு இல்லை.
இது குறித்து கண்டக்டர் செல்வகுமார் கொடுத்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்கு பதிந்து, போதை ஆசாமி வீரகண்ணனை கைது செய்தனர்.