ADDED : செப் 18, 2025 11:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; டாக்டர் கிருபாநிதி மகன் தொழிலதிபர் உமாசந்திரன் பிறந்த நாள் விழாவையொட்டி, கடலுார் புதுக்குப்பம் பராசக்தி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
உமாசந்திரன், காயத்ரி உமாசந்திரன் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்றனர். பின் வீட்டில் கேக் வெட்டி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
தனலட்சுமி சீனிவாசன் சிட்ஸ் பொது மேலாளர் ஜெயராமன், அ.தி.மு.க., வழக்கறிஞர் முத்துகிருஷ்ணன், காங்., பிரமுகர் ஆனந்த், ராமு, குமார், தி.மு.க., பகுதி செயலாளர் சலீம் உட்பட பலர் பங்கேற்றனர். நவீன்கார்த்திக் நன்றி கூறினார்.
மேலும், நடிகர் பிரபு, அய்யப்பன் எம்.எல்.ஏ., லீமா அய்யப்பன், பிரவீன் அய்யப்பன், நேச்சுரல் அதிபர் குமரவேல், தொழிலதிபர் சந்தானகிருஷ்ணன், டாக்டர் அருண், வித்யா கிருபாநிதி உட்பட பலர் போனில் வாழ்த்து தெரிவித்தனர்.