/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நீக்கப்படும் பகுதிகள் ஸ்டிக்கர் ஒட்டி மறைப்பு
/
நீக்கப்படும் பகுதிகள் ஸ்டிக்கர் ஒட்டி மறைப்பு
ADDED : ஆக 11, 2011 10:58 PM
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் சமச்சீர் பாடப்புத்தகத்தில் நீக்கப்படும் பகுதிகளை ஆசிரியர்கள் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக சமச்சீர் பாடப்புத்தகங்கள் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு சில பகுதிகள் நீக்கப்படுவதாக அரசு அறிவித்ததையடுத்து ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க முடிவு செய்தனர். ஏற்கனவே ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை பாடப்புத்தகங்களில் நீக்கப்பட்ட பகுதிகள் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட்டன. தற்போது ஏழாம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரையுள்ள பாடப்புத்தகங்களில் நீக்கப்படும் பகுதிகள் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கும் பணி நடக்கிறது. இதில் ஆசிரியர்கள் தங்கள் பாடப்புத்தத்தில் நீக்கப்படும் பக்கங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.