sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பயன்படுத்தப்படாமல் பாழாகும் பள்ளிக் கட்டடம்

/

பயன்படுத்தப்படாமல் பாழாகும் பள்ளிக் கட்டடம்

பயன்படுத்தப்படாமல் பாழாகும் பள்ளிக் கட்டடம்

பயன்படுத்தப்படாமல் பாழாகும் பள்ளிக் கட்டடம்


ADDED : செப் 06, 2011 10:27 PM

Google News

ADDED : செப் 06, 2011 10:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் மேல்பாதி பள்ளியில் கட்டப்பட்ட கட்டடத்தை பயன்படுத்தாததால் மாணவர்கள் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.

நெல்லிக்குப்பம் நகராட்சி மேல்பாதி துவக்கப் பள்ளியில் 150 மாணவர்கள் படிக்கின்றனர். மூன்று ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒரே அறையில் வகுப்புகள் நடப்பதால் மாணவர்கள் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை கவனிக்க முடியாத நிலையில் உள்ளனர்.

மாணவர்கள் கல்வி பாதிக்கப்படுவதால் கூடுதல் கட்டடம் கட்டித்தர வேண்டுமென கடந்த தி.மு.க., ஆட்சியில் கோரிக்கை விடுத்தனர். அப்போதைய எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நான்கு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கினார். கட்டடம் கட்டப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன் திறப்பு விழா நடந்தது.



திறப்பு விழா அன்று மட்டுமே கட்டடம் திறந்து இருந்தது. அதன் பிறகு அக்கட்டடம் பயன்படுத்தப்படாமல் மூடிக்கிடக்கிறது. கட்டடத்தை பயன்படுத்தாமல் ஆசிரியர்கள் அலட்சியமாக உள்ளனர். கட்டடத்தை பயன்படுத்த கல்வித்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. சேர்மன் கெய்க்வாட்பாபு வீட்டின் அருகில் உள்ள இப்பள்ளிக் கட்டடம் திறக்கப்படாமல் உள்ளது. பல பள்ளிகளில் கட்டடங்கள் இல்லாமல் மாணவர்கள் சிரமப்படும் நிலையில் கட்டடம் இருந்தும் பயன்படுத்தாததால் இப்பள்ளி மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.








      Dinamalar
      Follow us