/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பயிர் காப்பீடு திட்டம் விண்ணப்பிக்க அழைப்பு
/
பயிர் காப்பீடு திட்டம் விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஜூலை 29, 2025 07:21 AM
கடலுார் : குறுவை சாகுபடி நெல் பயிருக்கு மாவட்ட விவசாயிகள் வரும் 31ம் தேதிக்குள் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யலாம் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவரது செய்திக்குறிப்பு:
கடலுார் மாவட்டத்தில் நடப்பு ஆண்டு குறுவை பருவ நெல் சாகுபடிக்கு சொந்த நிலம் மற்றும் குத்தகை நிலத்தை விவசாயிகள் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.
இதன் மூலம் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பயிர் பாதிப்புகள் மற்றும் மகசூல் இழப்பீட்டிற்கு அரசு நிவாரணம் பெறலாம். பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் வங்கிகளில் பயிர் கடன் பெற்ற விவசாயிகள் மற்றும் பயிர் கடன் பெறாத விவசாயிகள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
பயிர் காப்பீடு முன்மொழிவு விண்ணப்பப் படிவத்துடன், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் பயிர் சாகுபடி அடங்கல் சான்று, நில கம்ப்யூட்டர் சிட்டா, ஆதார் கார்டு நகல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவை இணைக்க வேண்டும்.
இதனை அரசு இ-சேவை பொது மையம் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் காப்பீட்டிற்கு ஏக்கர் ஒன்றுக் கு752 ரூபாய் கட்டணம் செலுத்தி காப்பீடு செய்ய வேண்டும். குறுவை சாகுபடி நெற்பயி ருக்கு வரும் 31ம் தேதி காப்பீடு செய்ய கடைசி நாள்.
எனவே, மாவட்ட விவசாயிகள் காப்பீடு செய்ய வேண்டும் எனவும், மேலும் விபரங்களுக்கு வேளாண்மை விரிவாக்க மையங்களில் தெரிந்து கொள்ளலாம்.