/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆதரவற்ற குழந்தைகளுக்கு நிதி விண்ணப்பிக்க அழைப்பு
/
ஆதரவற்ற குழந்தைகளுக்கு நிதி விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஆக 02, 2025 07:31 AM
கடலுார் : பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு அரசின் அன்பு கரங்கள் நிதி திட்டத்தில் மாதம் ரூ.2,000 உதவித் தொகை வழங்கப்படுகிறது என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறியுள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
அரசின் 'அன்பு கரங்கள்' நிதி திட்டத்தில் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களில் தாய், தந்தையை இழந்து உறவி னர்கள் பாதுகாப்பில் வளரும் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் பள்ளிப் படிப்பு இடைநிற்றல் இன்றி அவர்கள் கல்வியைத் தொடர 18 வயது வரை மாதம் ரூ.2,000 உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற கடலுார் மாவட்டத்தில் பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகள், கைவிடப்பட்ட குழந்தைகள், ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் அன்புக்கரங்கள் நிதி பெற விண்ணப்பிக்கலாம்.
திட்டத்தில் தகுதி உள்ள குழந்தைகளுக்கு ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, குழந்தையின் வயது சான்று, குழந்தை வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றின் நகலுடன் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் அல்லது கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம்.