/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மீன்பிடி படகுகளை பதிவு செய்திட அழைப்பு
/
மீன்பிடி படகுகளை பதிவு செய்திட அழைப்பு
ADDED : நவ 24, 2025 06:43 AM
கடலுார்: மீன்பிடி உரிமையாளர்கள் மீன்பிடி படகுகளை வரும் 30க்குள் பதிவு செய்திட வேண்டும் கலெக்டர் வலியுறுத்தியுள்ளார்.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
மாவட்டத்தில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் எல்லைக்குட்பட்ட கடலோர பகுதிகளில் வசிக்கும் மீன்பிடித் தொழில் செய்யும் மீன்பிடி உரிமையாளர்கள் தங்கள் மீன்பிடி படகுகளை பதிவு செய்திட வேண்டும்.
தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டப்படி, மீன்பிடி உரிமையாளர்கள் தங்கள் மீன்பிடி விசைப்படகுகள், இயந்திரம் பொருத்தப்பட்ட மற்றும் பொருத்தப்படாத நாட்டுப்படகுகளை பதிவு செய்த பின்னரே மீன்பிடி உரிமம் பெற முடியும்.
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் எல்லைக்குட்பட்ட கடலுார் மாவட்டத்தை சேர்ந்த பதிவு செய்யப்படாத மீன்பிடி விசைப்படகுகள், இயந்திரம் பொருத்தப்பட்ட, பொருத்தப்படாத நாட்டுப்படகுகளின் உரிமையாளர்கள் பதிவு செய்து தங்கள் மீன்பிடி உரிமத்தை பெற்று கொள்ள வேண்டும். வரும் 30க்குள் அனைத்து மீன்பிடி படகு உரிமையாளர்களும் பதிவு செய்திட வேண்டும்.
தவறும்பட்சத்தில் கடல் மீனவர்களுக்கான நலத்திட்டங்களிலிருந்து விலக்களிக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

