/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மேல்நிலைநீர்தேக்க தொட்டி பழுது நீக்கப்படுமா?
/
மேல்நிலைநீர்தேக்க தொட்டி பழுது நீக்கப்படுமா?
ADDED : நவ 24, 2025 05:54 AM

நடுவீரப்பட்டு: பழுதடைந்த மேல்நிலைநீர்தேக்க தொட்டி சரி செய்யப்படுவது எப்போது என கேள்வி எழுந்துள்ளது.
பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பத்திரக்கோட்டையில் அம்மன் கோவில் அருகில் மேல்நிலைநீர்தேக்க தொட்டி உள்ளது.
இந்த தொட்டியிலிருந்து அம்மன் கோவில் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு தண்ணீர் வினியோகிக்கப்பட்டது.
இந்த மேல்நிலைநீர்தேக்க தொட்டி பழுதடைந்ததால், கடந்த சில மாதங்களுக்கு முன் தொட்டி முழுமையாக பழுது நீக்கப்பட்டது. இந்த பழுது நீக்கப்பட்ட மேல்நிலைநீர்த்தேக்க தொட்டியில் ஏற்றும் நீர் தேங்காமல் கசிவு ஏற்பட்டு வீணானது.
இதனால் தற்போது தொட்டியில் தண்ணீர் ஏற்றாமல், மோட்டாரில் இருந்து நேரடியாக 'பைப்' மூலம் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது.
இதனால் அனைத்து பகுதிகளுக்கும் குறிப்பிட்ட நேரத்தில் தண்ணீர் வழங்க முடியவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

