/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குழந்தை வளர்ப்பு இல்லங்கள் சேவை விருது பெற அழைப்பு
/
குழந்தை வளர்ப்பு இல்லங்கள் சேவை விருது பெற அழைப்பு
குழந்தை வளர்ப்பு இல்லங்கள் சேவை விருது பெற அழைப்பு
குழந்தை வளர்ப்பு இல்லங்கள் சேவை விருது பெற அழைப்பு
ADDED : ஜூலை 25, 2025 02:39 AM
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் தகுதி உள்ள குழந்தைகள் வளர்ப்பு இல்லங்கள், 'முன் மாதிரியான சேவை விருது'க்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சிபி ஆதித்தியா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
அரசு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் இயங்கும் நிறுவனங்களில் குழந்தைகள் நலன் பேணி காப்பதில் திறம்பட செயல்பட்ட நிறுவனங்களுக்கு 'முன் மாதிரியான சேவை விருது' வழங்கப்படுகிறது.
இந்த விருதுடன் 4 லட்சம் ரூபாய் ரொக்கம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. அரசின் கீழ் இயங்கும் குழந்தைகள் இல்லம், தன்னார்வ தொண்டு நிறுவன குழந்தைகள் இல்லம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் முன் மாதிரியான சேவை விருதுகள் வழங்கப்படுகிறது.
விருதுக்கு தகுதி உள்ள குழந்தைகள் வளர்ப்பு இல்ல நிர்வாகிகள் உரிய ஆவணங்கள் இணைத்து, உரிய வழிமுறையுடன் விண்ணப்பத்தை கடலுார் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வரும் 31ம் தேதிக்குள் வழங்க வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு கடலுார் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

