/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மானியத்தில் உளுந்து விதை விவசாயிகளுக்கு அழைப்பு
/
மானியத்தில் உளுந்து விதை விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : செப் 25, 2024 11:39 PM
விருத்தாசலம், : விருத்தாசலம் பகுதி விவசாயிகள் மானிய விலையில் உளுந்து விதைகளை வாங்கி பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விருத்தாசலம் வேளாண் உதவி இயக்குனர் விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
விருத்தாசலம், மங்கலம்பேட்டை வேளாண் விரிவாக்க மையங்களில் சான்று பெற்ற வம்பன் 10, 11, எம்.டி.யு., 1 உளுந்து விதை ரகங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விதை கிராம திட்டம் மற்றும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ், உளுந்து விதைகள் 50 சதவீதம் மானிய விலையில் வழங்கப்படுகிறது.
விவசாயிகள் தங்களது நிலத்தின் சிட்டா நகல், ஆதார் எண், டெபிட் கார்டு ஆகிய ஆவணங்களுடன் வந்து பெற்று பயன்பெறலாம்.
மேலும், விதைப்பண்ணைகள் அமைக்க விருப்பம் உள்ள விவசாயிகள் வேளாண் துறை அலுவலகத்தில் தாங்கள் விதைப் பண்ணை பதிவு செய்து, மீண்டும் தரமான விதைகளை வழங்கினால், உற்பத்தி மானியமாக கிலோ ஒன்றிற்கு ரூ.25 வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

