வள்ளலார் குருகுலம் பள்ளியில் என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு
வள்ளலார் குருகுலம் பள்ளியில் என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு
UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 06:45 PM

அ நிறம் | அளவு
கடலுார்: வடலுார் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடந்தது.
வடலுார் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களின் சிறப்பு முகாம் கருங்குழி கிராமத்தில் நடந்தது. முகாமில், போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, பொது மருத்துவம், துாய்மை பணி, கால்நடை மருத்துவம், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டன. முகாமின் நிறைவு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி தாளாளர் ராஜா வெங்கடேசன் தலைமை தாங்கினார். நிர்வாக அலுவலர் லதா முன்னிலை வகித்தார். முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
என்.எஸ்.எஸ்., வெற்றிச்செல்வன் நன்றி கூறினார்.
