/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உடைந்த கால்வாய் சரி செய்யப்படுமா?
/
உடைந்த கால்வாய் சரி செய்யப்படுமா?
ADDED : அக் 23, 2025 11:40 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் கடை வீதியில் உடைந்த கால்வாய் சரி செய்திட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் கடைவீதியில் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது.
இந்த கால்வாயில் நடுவீரப்பட்டுக்கு செல்லும் வழியில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
இரவு நேரத்தில் வரும் வாகன ஓட்டிகள் கால்வாயில் விழுந்து செல்லும் நிலை உள்ளது.
பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு உடைந்த கால்வாயை சரி செய்வதற்கு சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

