/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆற்றங்கரைகளில் செறிவூட்டப்பட்ட கிணறுகள் அமைக்கப்படுமா? விவசாயிகள் கோரிக்கை
/
ஆற்றங்கரைகளில் செறிவூட்டப்பட்ட கிணறுகள் அமைக்கப்படுமா? விவசாயிகள் கோரிக்கை
ஆற்றங்கரைகளில் செறிவூட்டப்பட்ட கிணறுகள் அமைக்கப்படுமா? விவசாயிகள் கோரிக்கை
ஆற்றங்கரைகளில் செறிவூட்டப்பட்ட கிணறுகள் அமைக்கப்படுமா? விவசாயிகள் கோரிக்கை
ADDED : ஜூன் 29, 2024 06:14 AM

கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாயிகள்மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கலெக்டர் அருண் தம்புராஜ்தலைமை தாங்கினார். வேளாண் இணை இயக்குனர் ஏழுமலை, கலெக்டர் நேர்முகஉதவியாளர் (விவசாயம்) ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில்,விவசாயிகள் கோரிக்கைகள் குறித்து பேசியதாவது:
வெயில் தாக்கத்தால் முந்திரி மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. எஸ்.புதுார்,எம்.புதுார் பகுதியில் உள்ள மலைகள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. அந்த இடங்களில்மரம் நட்டு பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உழவர் சந்தையில் வாகனங்கள் நிறுத்த இடவசதி ஏற்படுத்த வேண்டும். உழவர் சந்தையில் குப்பை மலைபோல் குவிந்து கிடப்பதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திட்டக்குடியில் வெலிங்டன் பிரபுவிற்கு மணிமண்டபம் அமைக்கவேண்டும். ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். திட்டக்குடி அரசுஆண்கள் பள்ளியில் விளையாட்டு மைதானம் குட்டை போல் காணப்படுவதைசீரமைக்க வேண்டும்.
நத்தம், சேமக்கோட்டை பகுதியில் உள்ள ஏரி, வாய்க்கால்களை அளவீடு செய்து துார்வார மூன்று ஆண்டுகளாக மனு கொடுத்தும் நடவடிக்கைஎடுக்கவில்லை. ஏரி, வாய்க்கால்களை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு வருகிறது. நீர்மட்டம் 600அடிக்கு மேல் குறைந்துள்ளது. பிற மாவட்டங்களின் வடிகாலாக உள்ள கடலுார்மாவட்டத்தில் ஐந்து ஆறுகள் ஓடுகிறது. எதிர்கால தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கும்வகையில், தொலைநோக்கு பார்வையுடன் ஆற்றங்கரைகளில் செறிவூட்டப்பட்டகிணறுகள் அமைத்து செயற்கை முறையில் தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். நீர்தேக்கம், நீர்நிலைகளில் மண் எடுப்பதை அதிகாரிகள் கண்காணிக்கவேண்டும்.
ஸ்ரீமுஷ்ணம் தாலுகாவில் 10 ஆயிரம் எக்டர் நெல் அறுவடை துவங்கப்பட்டுள்ளது. ஸ்ரீமுஷ்ணம் தாலுகாவில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் உடனே திறக்க வேண்டும். பெலாந்துறை அணைக்கட்டில் இருந்து பாளையாங்கோட்டை வரை 35 கி.மீ., பொதுப்பணித்துறை வாய்க்கால் துார்வார வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் பேசினர்.
இவைகளுக்கு பதில் அளித்து பேசிய கலெக்டர், விவசாயிகள் கோரிக்கைகள் மற்றும் மனுக்களைவிசாரணை செய்து தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கஅறிவுறுத்தினார்.
அப்போது, பெண்ணாடம் அடுத்த தொளார் பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்டவிவசாயிகள், கிசான் நிதி உதவி திட்டத்தின் கீழ் 400க்கும் மேற்பட்டவிவசாயிகளுக்கு இதுவரை உதவி தொகை கிடைக்கவில்லை. இதுதொடர்பாகபலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. அதனால் கிசான் திட்டத்தில் உதவி தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
அதற்கு பதிலளித்த கலெக்டர் விவசாயிகள் விண்ணப்பங்களின் நிலை குறித்து இன்று (நேற்று) மாலைக்குள் தகவல் அளிக்க வேண்டும். தகுதியானஅனைத்து விவசாயிகளுக்கும் உதவி தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பல்வேறு துறை அரசு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.