/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சேதமடைந்த மணி கூண்டுகள் பழமை மாறாமல் சீரமைக்கப்படுமா?
/
சேதமடைந்த மணி கூண்டுகள் பழமை மாறாமல் சீரமைக்கப்படுமா?
சேதமடைந்த மணி கூண்டுகள் பழமை மாறாமல் சீரமைக்கப்படுமா?
சேதமடைந்த மணி கூண்டுகள் பழமை மாறாமல் சீரமைக்கப்படுமா?
ADDED : பிப் 27, 2024 11:47 PM

கடலுாரில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட மணிக் கூண்டுகள் சேதமடைந்து பாழாகி வருகிறது.
கடலுார் பஸ் நிலையம், மஞ்சக்குப்பம், முதுநகர், திருப்பாதிரிப்புலியூர் பான்பரி மார்க்கெட், மாநகராட்சி பூங்கா உள்ளிட்ட இடங்களில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கோபுர வடிவில் கட்டடம் கட்டப்பட்டு பிரம்மாண்டமான மணிக்கூண்டுகள் அமைக்கப்பட்டன. ஆனால், இந்த மணிக்கூண்டுகளை பராமரிக்க நடவடிக்கை எடுக்காததால் கட்டடத்தில் ஆங்காங்கே செடிகள் வளர்ந்து விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால், மணி கூண்டுகள் காட்சிப் பொருளாகவே உள்ளன. எனவே, மாநகராட்சி நிர்வாகம் ஆங்கிலேயேர் காலத்தின் வரலாற்று சின்னமான மணி கூண்டுகளை பழமை மாறாமல் சீரமைத்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.