/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குறைகேட்பு கூட்டம் ரத்து: மனுக்கள் பெற ஏற்பாடு
/
குறைகேட்பு கூட்டம் ரத்து: மனுக்கள் பெற ஏற்பாடு
ADDED : மார் 19, 2024 06:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர குறைகேட்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டதால், பொதுமக்கள் பெட்டியில் புகார் மனுக்களை போட்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
தமிழகத்தில் லோக் சபா தேர்தல் வரும் ஏப்., 19ம் தேதி நடக்கிறது.
இதற்கான தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்ததால் கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் வாராந்திர குறைகேட்பு கூட்டம் செய்யப்பட்டது.
இதையடுத்து, மனு கொடுக்க வரும் பொதுமக்களின் வசதிக்காக கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
இந்த புகார் பெட்டியில் நேற்று பொதுமக்கள் தங்களின் புகார் மற்றும் கோரிக்கை மனுக்களை போட்டுவிட்டு சென்றனர்.

