
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார், மஞ்சக்குப்பம் சாலக்கரை மாரியம்மன் கோவிலில் ஐயப்ப சுவாமிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது.
கடலுார், மஞ்சக்குப்பம் சாலக்கரை மாரியம்மன் கோவிலில் ஐயப்ப சுவாமிக்கு சபரிகிரீச சஜ்ஜன சேவா சங்கம் சார்பில் மண்டல-மகர விழா கடந்த நவ., 16ம் தேதி துவங்கியது. இதனை முன்னிட்டு நவ., 20ம் தேதி 108 வலம்புரி சங்காபி ேஷகம், 24ம் தேதி பால்குட ஊர்வலம் நடந்தது.
நேற்று ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜையைத் தொடர்ந்து, திருவிளக்கு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஐயப்ப சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். வரும் 26ம் தேதி மண்டல கால பூஜை நிறைவு முன்னிட்டு காலை 10:00 மணிக்கு அபி ேஷகம், பகல் 12:30 மணி்க்கு தீபாராதனை நடக்கிறது.