
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் கங்கையம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
நெல்லிக்குப்பம், கீழ்பட்டாம்பாக்கம் கங்கையம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழாவையொட்டி நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. குண்டுமணி அய்யனார் கோவிலில் இருந்து சக்தி கரகம் புறப்பட்டு ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தது.
தொடர்ந்து, அம்மனுக்கு தீபாராதனை, சாகை வார்த்தல் நடந்தது. உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் பெண்கள் திருவிளக்கு பூஜை செய்தனர். அம்மன் ஊஞ்சல் உற்சவத்தில் அருள்பாலித்தார். இரவு அம்மன் வீதியுலா நடந்தது. பூஜைகளை குமரன் குருக்கள் செய்தார். சேர்மன் ஜெயந்தி உட்பட ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.