ADDED : அக் 26, 2025 10:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் மத்திய சிறையில் கைதியிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கடலுார் மத்திய சிறையில் கைதிகள் கஞ்சா பயன்படுத்துவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், கைதிகள் மற்றும் சிறை வளாகம் முழுவதும் சிறைக்காவலர்கள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, ஆயுள் தண்டைன கைதி மணிகண்டன்,31; என்பவரிடம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து சிறை அலுவலர் விக்னேஷ் அளித்த புகாரின் பேரில், கடலுார், முதுநகர் போலீசார், மணிகண்டன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

