தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பல்கலை ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

பல்கலை ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

பல்கலை ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி


ADDED : ஜன 02, 2024 04:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 02, 2024 04:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிதம்பரம், : என்.எல்.சி., சார்பில் கல்லூரி, சுரங்கவியல் பட்டயப்படிப்பு ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலத்துடன், என்.எல்.சி. செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்த அடிப்படையில், 2016 முதல் சுரங்கவியல் பட்டய படிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதில் என்.எல்.சி., சார்பில் கல்லூரி ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், 'சுரங்கங்கள் மற்றும் மின் ஆலைகளில், அண்மை கால தொழில்நுட்ப வளர்ச்சி' என்ற தலைப்பில், 6 நாட்கள் பயிற்சி வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

என்.எல்.சி., செயல் இயக்குநர் ஜெகதீஸ் சந்திரமசூம்தார் தலைமை தாங்கி, பயிற்சியை துவக்கி வைத்தார். சுரங்கவியல் பட்டயப்படிப்பு இணை இயக்குநர் மணிகண்டன் வரவேற்றார். கடல்சார் அறிவியல் புல முதல்வர் அனந்தராமன் துவக்கவுரை ஆற்றினார். துறைத் தலைவர்கள் வைத்தியநாதன், தனசேகர் வாழ்த்துரை வழங்கினர். இணை பேராசிரியர் சத்யன் நன்றி கூறினார்.

பயிற்சியில் 70 க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் பங்கேற்றனர். இதில், 20 க்கும் மேற்பட்ட வல்லுநர்கள், பல்வேறு துறை சார்ந்த, தலைப்புகளில் சிறப்புரை ஆற்றுகின்றனர். சரவணன், மணிகண்டன், சத்யன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us