ADDED : அக் 24, 2025 03:18 AM
வடலூர்: காரை வாடகைக்கு எடுத்து மோசடி செய்த மூவர் மீது, போலீசார் வழக்குப் பதிந்தனர்
கடலூர், பெரிய கங்க ணாங்குப்பம், எம்.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் ரவி மகன் தமிழரசன்.
இவரது நண்பர் ஆவடி பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 32; கடந்த மார்ச் மாதம், தமிழரசனுக்கு சொந்தமான, பிஒய்-05-டி 5653 என்ற பதிவெண் கொண்ட மாருதி-எர்டிகா காரை ரவிச்சந்திரன் வாடகைக்கு ஒப்பந்தம் போட்டு எடுத்துள்ளார்.
அதன் பின்பு குறிஞ்சிப் பாடியை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவரிடம் ரவிச்சந்திரன் காரை ஒப்படைத்துள்ளார். சண்முக சுந்தரம் காரை பேராவூரணியை சேர்ந்த மரியா சபரி நாதன் என்பவரிடம் ஒப்படைத்தார்.
தனக்கு சொந்தமான காரை மூவர் சேர்ந்து மோசடி செய்து அபகரித்த தாகவும், தமிழரசன் தாய் ஜோதிலட்சுமி, 44, வடலூர் போலீசில் புகார் அளித்தார். மோசடியில் ஈடுபட்ட மூவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

