/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வடலுாரில் மர்மமான முறையில் தீப்பற்றி எரிந்த கார்
/
வடலுாரில் மர்மமான முறையில் தீப்பற்றி எரிந்த கார்
ADDED : நவ 16, 2024 02:40 AM

கடலுார்: வடலுாரில் மர்மமான முறையில் ஷெட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வடலுார் ஆபத்தாரணபுரத்தைச் சேர்ந்தவர் மனோகரன்,68. ஓய்வுபெற்ற என்.எல்.சி., ஊழியர். வீட்டின் அருகே மளிகைக்கடை வைத்துள்ளார்.
அவருக்குச்சொந்தமான டாடா இன்டிகா காரை, வீட்டின் அருகே ஷெட் அமைத்து அதில் நிறுத்தியிருந்தார். நேற்று காலை 9.30மணிக்கு ஷெட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார், திடீரென
தீப்பற்றி எரிய துவங்கியது. கார் ஷெட்டிலிருந்து புகை வருவதைப்பார்த்த மனோகரன், ஓடிச்சென்று கார் தீப்பற்றி எரிவதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அருகில் இருந்தவர்கள் உதவியுடன் காரில் ஏற்பட்ட தீயை அணைக்க முயற்சி செய்தார். தகவலறிந்த குறிஞ்சிப்பாடி தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.
ெஷட்டில் நிறுத்தியிருந்த கார் எப்படி தீபிடித்தது என்பது குறித்து வடலுார் போலீசார் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.