/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கோவிலில் பக்தர்கள் வசதிக்காக தரைவிரிப்பு
/
கோவிலில் பக்தர்கள் வசதிக்காக தரைவிரிப்பு
ADDED : மார் 20, 2024 05:07 AM

விருத்தாசலம் : கோடை துவங்கியுள்ள நிலையில், விருத்தகிரீஸ்வரர் கோவில் வளாகத்தில் பக்தர்கள் நடந்து செல்ல வசதியாக, 66 ஆயிரம் ரூபாய் செலவில் தரைவிரிப்பு போடப்பட்டது.
தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில், கோடையில் பக்தர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்கவும், பகலில் நீர்மோர் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டது. அந்த வகையில், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், காலை 7:00 மணிக்கே வெயில் சுட்டெரிப்பதால், பக்தர்கள் கோவிலை சுற்றி வர முடியாமல் சிரமமடைந்து வருகின்றனர். இதை தவிர்க்கும் வகையில், கோவில் நிதியில் இருந்து பக்தர்களுக்கு வசதியாக தரை விரிப்பு போட அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் 2000 அடிக்கு, 66 ஆயிரம் ரூபாய் மதிப்பில் தேங்காய் நாரில் தயாரான தரைவிரிப்பு போடப்பட்டுள்ளது. இதனால் வெயிலிலும் சிரமமின்றி கோவிலை சுற்றி வந்து தரிசனம் செய்ய முடிவதால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதே போன்று மாவட்டம் முழுவதும் கோவில்களில் வசதிகள் செய்துதர பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

