/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விடுமுறை அளிக்காத 50 நிறுவனங்கள் மீது வழக்கு
/
விடுமுறை அளிக்காத 50 நிறுவனங்கள் மீது வழக்கு
ADDED : அக் 03, 2024 11:23 PM
கடலுார்: காந்தி ஜெயந்திக்கு விடுமுறை அளிக்காத 50 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடலுார் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஞானபிரகாசம் செய்திக்குறிப்பு:
தொழிலாளர் உதவி ஆணையர் தலைமையில், தேசிய விடுமுறை தினமான காந்தி ஜெயந்தி அன்று, பணியாளர்களுக்கு விடுப்பு அளிக்காத கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் என 50 நிறுவனங்கள் மீது வழக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், வருங்காலங்களில் தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை நாட்களில் பணியாளர்களை பணிக்கு அமர்த்தினால், உரிய படிவத்தை பூர்த்தி செய்து விடுமுறை நாளிற்கு 24 மணி நேரத்திற்கு முன் சம்பந்தப்பட்ட தொழிலாளர் துணை, உதவி ஆய்வாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.