ADDED : ஜூலை 26, 2026 04:13 AM
அ நிறம் | அளவு
கடலுார்: திருட்டு வழக்கில் ஜாமினில் தலைமறைவான நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கடலுார், புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் கார்த்திக்,42; இவரை கடந்த, 2022ம் ஆண்டு நடந்த திருட்டு வழக்கில் புதுநகர் போலீசார் கைது செய்து, கடலுார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், இவ்வழக்கு விசாரணை நடந்த நிலையில், ஜாமினில் வெளியே வந்த கார்த்திக், மீண்டும் கோர்ட்டில் ஆஜராகாமல், கடந்த சில மாதங்களுக்கு முன், தலைமறைவானார். இதுகுறித்த புகாரின் பேரில், கடலுார், புதுநகர் போலீசார் நேற்று கார்த்திக் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
