ADDED : மார் 15, 2024 11:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் பகுதியில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பற்றி அவதுாறான போஸ்டர் ஒட்டியவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
சி.என்.பாளையம், தோப்பு தெருவை சேர்ந் தவர் சீதாராமன், 46; அ.தி.மு.க., கிளை செயலாளர்.
இவர் நேற்று சி.என்.பாளையம் பகுதியில் சர்வ தேச போதை பொருள் மாபியாவுடன் இவர்களுக்கு என்ன தொடர்பு என, முதல்வர், அமைச்சர்களின் புகைப்படத்துடன் கூடிய சுவரொட்டியை ஒட்டினார்.
இது தொடர்பாக சீதாராமன் மீது நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

