/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிலை மாயமான வழக்கில் கவுன்சிலர் மீது வழக்கு
/
சிலை மாயமான வழக்கில் கவுன்சிலர் மீது வழக்கு
ADDED : செப் 23, 2024 08:21 AM
பண்ருட்டி : பண்ருட்டி அருகே அம்மன் கற்சிலை மாயமான தில், ஒன்றிய கவுன்சிலர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
பண்ருட்டி அடுத்த மேலிருப்பு கிராமத்தில் முத்தாலம்மன் கோவில் உள்ளது.
கோவில் திருவிழா நடத்துவதில் முன்னாள் ஊராட்சி தலைவர் ேஹமமாலினிபாபு தரப்பினருக்கும், ஒன்றிய கவுன்சிலர் தனபதி தரப்பினருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு, விழா நிறுத்தப்பட்டது.
அதையடுத்து, கோர்ட் உத்தரவுபடி இருதரப்பினரும் தனித்தனியாக திருவிழாவை நடத்தி முடித்தனர். இந்நிலையில், கடந்த 5 ம் தேதி கோவிலில் இருந்த அபிேஷக அம்மன் கற்சிலை காணாமல் போய்விட்டதாகவும், . முன்னாள் ஊராட்சி தலைவரின் கணவர் பாபு உள்ளிட்டோர் மீது சந்தேகம் உள்ளதாக காடாம்புலியூர் போலீசில் தனபதி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பலராமன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு விருத்தாசலம் வட்டம், இருப்பு கிராமத்தில் அபிேஷக அம்மன் சிலையை கண்டுபிடித்து மீட்டனர்.
இந்நிலையில் மேலிருப்பு இலுப்பை தோப்பு அருகில் இருந்த பிடாரி அம்மன் கற்சிலையை, ஒன்றிய கவுன்சிலர் தனபதி உட்பட சிலர் திருடி சென்றதாக, ஊராட்தலைவர் ேஹமமாலினி கணவர் பாபு, காடாம்புலியூர் புகார் செய்தார். அதன்பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.