/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கறிக்கடை உரிமையாளரை தாக்கிய மூவர் மீது வழக்கு
/
கறிக்கடை உரிமையாளரை தாக்கிய மூவர் மீது வழக்கு
ADDED : ஜன 29, 2024 06:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம், : முன்விரோதம் காரணமாக கறிக்கடை உரிமையாளரை தாக்கிய மூவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
விருத்தாசலம் அடுத்த கட்டியநல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம், 59. கறிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கும் அதேப் பகுதியைச் சேர்ந்த தனசேகர் என்பவருக்கு முன்விரோதம் உள்ளது. கடந்த 23ம் தேதி இவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.
தனசேகர், ஆதரவாளர் செல்வம், சூர்யா ஆகியோர் பரமசிவத்தை தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தனர். புகாரின் பேரில், தனசேகர் உட்பட மூவர் மீது மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.