/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பழக்கடையை சேதப்படுத்திய 16 பேர் மீது வழக்கு
/
பழக்கடையை சேதப்படுத்திய 16 பேர் மீது வழக்கு
ADDED : ஆக 06, 2025 08:03 AM
திட்டக்குடி : திட்டக்குடியில் ஓட்டல், பழக்கடையை பொக்லைன் மூலம் தரைமட்டமாக்கிய 16 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.
திட்டக்குடி, தொழுதுார் மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக்,36; வழக்கறிஞர். இவரது தந்தை அக்ரி முருகேசன். இவர், அ.ம.மு.க., கடலுார் மேற்கு மாவட்ட செயலாளர். கார்த்திக்கிற்கும், பெண்ணாடம் அடுத்த அரியராவியைச் சேர்ந்த அருணகிரிக்கும் இடம் சம்பந்தமாக பிரச்னை உள்ளது.
பிரச்னை தொடர்பான இடத்தில் கார்த்திக், பழக்கடை மற்றும் ஓட்டல் நடத்த வாடகைக்கு விட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அருணகிரி உட்பட 16 பேர் நேற்று முன்தினம் நள்ளிரவு பொக்லைன் உதவியுடன் பழக்கடை மற்றும் ஓட்டலை இடித்து தரைமட்டமாக்கினர்.
இதுகுறித்து கார்த்திக் அளித்த புகாரின் பேரில், திட்டக்குடி போலீசார், அருணகிரி உட்பட 16 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

