/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பஸ் பயணி தாக்கு 2 பேர் மீது வழக்கு
/
பஸ் பயணி தாக்கு 2 பேர் மீது வழக்கு
ADDED : ஜன 05, 2025 06:36 AM
புவனகிரி :  புவனகிரி அருகே தனியார் பஸ் நிற்காததை தட்டிக்கேட்ட பயணியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த பஸ் ஊழியர்கள் இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
புவனகிரி அருகே சீயப்பாடியை சேர்ந்தவர் வீரமணி. நேற்று காலை புவனகிரி செல்ல பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது, சேத்தியாத்தோப்பில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த தனியார் பஸ்சை நிறுத்தினார். பஸ் நிற்காததால், புவனகிரி பஸ் நிலையத்தில் நின்றிருந்த பஸ் கண்டக்டரிடம் கேட்டார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு, பஸ் ஊழியர்களான பி.உடையூரை சேர்ந்த மனோகரன், ஒரத்துாரை சேர்ந்த கபிலன் ஆகியோர், வீரமணியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து வீரமணி கொடுத்த புகாரில், புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் தேடி வருகின்றனர்.

