ADDED : மே 03, 2025 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: மணல் கடத்திய 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
விருத்தாசலம் போலீசார் நேற்று முன்தினம் நாச்சியார்பேட்டை பகுதியில் உள்ள மணிமுக்தாறு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மணலுார் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார், 20; ராமச்சந்திரன்பேட்டையை சேர்ந்த மாரியப்பன் ஆகியோர் மாட்டு வண்டியில், ஆற்று மணல் கடத்தி வந்தது தெரிந்தது.
இதையடுத்து சந்தோஷ்குமார், மாரியப்பன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.