/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாலிபருக்கு மிரட்டல் 2 பேர் மீது வழக்கு
/
வாலிபருக்கு மிரட்டல் 2 பேர் மீது வழக்கு
ADDED : டிச 13, 2024 06:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி: வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்
குள்ளஞ்சாவடி அடுத்த சிலுவைப்பாளையம், மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் மகன் பெலிக்ஸ்.
இவர் நேற்று முன்தினம் சத்திரம் பஸ் நிறுத்தத்தில் நின்று போன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது இரண்டு நபர்கள் பெலிக்ஸ்சை ஆபாசமாக திட்டி, தாக்கி, அவர் மொபைல் போனை உடைத்து கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து ஆரோக்கியராஜ் குள்ளஞ்சாவடி போலீசில் புகார் அளித்தார். தாக்குதலில் ஈடுபட்ட எஸ்.புதுக்குப்பம் பகுதியை சேர்ந்த, உத்தண்டி, பாலசுப்பிரமணியன் ஆகிய இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.