/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
செக்யூரிட்டியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
/
செக்யூரிட்டியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
ADDED : நவ 23, 2025 06:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூரில் தனியார் நிறுவன செக்யூரிட்டியை தாக்கிய 3 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
கடலுார் முதுநகர் அடுத்த செல்லங்குப்பத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்,63; இவர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணிபுரிகிறார்.
ராஜேந்திரன் பணிபுரியும் நிறுவனத்தின் கேட்டை 3 வாலிபர்கள் திறக்க முயன்றனர். அதை தடுத்து நிறுத்த முயன்ற ராஜேந்திரனை, திட்டி தாக்கினர். புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார், 3 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

